×

ஏரலில் பாஜ சார்பில் குடியுரிமை திருத்த சட்ட விளக்க பொதுக்கூட்டம்

ஏரல், மார்ச் 10:  ஏரலில் ஒன்றிய பாஜ சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் குறித்த விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஏரல் மார்க்கெட் திடலில் நடந்த இக்கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் அர்ஜூன் பாலாஜி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பால்ராஜ் முன்னிலை வகித்தார். முத்துமாலை வரவேற்றார். இதில் சசிகலா புஷ்பா எம்.பி., தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் மாநில தலைவர் வேலூர் இப்ராஹிம் உள்ளிட்ட பலர் பேசினர். கூட்டத்தில் வணிகர் பிரிவு மாநில தலைவர் ராஜகண்ணன், மாவட்டச் செயலாளர்கள் வீரமணி, சங்கர், சுதா, விவசாய அணி துரைராஜ் இளந்துழகன், ஏரல் பெரியசாமி உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

Tags : Citizenship Amendment Committee Meeting ,
× RELATED தூத்துக்குடியில் கேந்திரிய வித்யாலயா பள்ளி