×

மங்கலம் கிராமத்தில் போர்மன்னன் லிங்கேஸ்வரர் தேர் திருவிழா நாளை நடக்கிறது

திருவண்ணாமலை, மார்ச் 10: திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் நாளை போர்மன்னன் லிங்கேஸ்வரர் தேர் திருவிழா நடக்கிறது.திருவண்ணாமலை அடுத்த மங்கலம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற போர்மன்னன் லிங்கேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயில் சார்பாக ஆண்டு தோறும் மாசி மகத்தன்று திருவிழா தொடங்கி, 4ம் நாள் போர்மன்னன் லிங்கேஸ்வரர் தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம்.அதன்படி 188ம் ஆண்டு திருவிழா கோலாகலமாக கடந்த 7ம் தேதி இரவு விநாயகர் ஊர்வலத்துடன் தொடங்கியது. அன்று இரவு சினிமா திரைப்பட நடிகர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 2ம் நாளான நேற்று முன்தினம் இரவு பாலமுருகன் பல்லக்கு ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து, நாட்டுப்புற பாட்டு நிகழ்ச்சியுடன் பக்தி நாடகம் நடந்தது. 3ம் நாளான நேற்று இரவு கரகாட்டம் ஊர்வலத்துடன் பாட்டு மன்றம் நடைபெற்றது.4ம் நாளான இன்று பரிவார தேவதை ஊர்வலம் நடக்கிறது. இதில் கலைமாமணி கண்மணி எம்.எஸ்.ராஜாவின் `ஈசனை காத்த ஈஸ்வரி'''' என்ற பக்தி நாடகம் நடக்கிறது.தொடர்ந்து வாணவேடிக்கை, கரகாட்டம், மகாகும்பம், சுவாமி அருள் வாக்கு நடைபெறுகிறது. விழாவையொட்டி நாளை காலை 6 மணிக்கு போர்மன்னன் லிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.

Tags : Bormannan Lingeshwarar Chair Festival ,Mangalam Village ,
× RELATED மங்களம் கிராமத்தில் ஆரணியாற்றை...