×

போளூர் அடுத்த பொத்தரை அரசு நடுநிலைப்பள்ளி ஆண்டு விழா மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்பு

போளூர், மார்ச் 10: போளூர் அடுத்த பொத்தரை நடுநிலைப்பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பங்கேற்றார்.போளூர் ஒன்றியம் பொத்தரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்த ஆண்டு விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் மலர்முருகன் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் வ.வேணுகோபால், துணை தலைவர் ச.சத்தியகாந்தி, மேலாண்மைக்குழு தலைவர் ர.ரேவதி, துணை தலைவர் ச.சந்திரபாபு தெய்வராஜ் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் கோ.பானுமதி வரவேற்றார். ஆசிரியர் அ.இ.ஜெரினாபேகம் ஆண்டறிக்கை வாசித்தார்.இதில் பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. பல்வேறு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு போளூர் மாவட்ட கல்வி அலுவலர் ரா.கலைவாணி மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கி பேசினார்.

நிகழ்ச்சியில் துணை ஆய்வாளர் பா.வேங்கட சுப்ரமணியன், வட்டார கல்வி அலுவலர் க.மோகன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ரா.பாஸ்கரன், ஊராட்சி தலைவர் ப.சுப்பிரமணியன், துணை தலைவர் அ.அஞ்சலா அரங்கநாதன், ஊராட்சி உறுப்பினர்கள் என்.ரமேஷ், ரா.மகேஷ் மற்றும் ஆசிரியை தேவ.புளோரா மற்றும் பெற்றொர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ந.சீனுவாசன் நன்றி கூறினார்.

Tags : District Education Officer ,Polur ,Potarai ,Government ,Middle School Anniversary ,
× RELATED போளூர் பகுதிகளில் ஊரடங்கால்...