செங்கம் உழவர் சந்தையில் வேளாண்மை துணை இயக்குனர் ஆய்வு விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்

செங்கம், மார்ச் 10: செங்கம் உழவர் சந்தையில் தினகரன் செய்தி எதிரொலியால் வேளாண்மை துணை இயக்குநர் ஆய்வு செய்து விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார்.

விவசாயிகள் தங்களது உற்பத்தி பொருட்களுக்கு அவர்களே விலை நிர்ணயம் செய்து லாபம் அடைய வேண்டும். விளை பொருட்களின் விற்பனையில் இடை தரகர்கள் குறுக்கீடு இருக்க கூடாது என்ற நோக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு திமுக ஆட்சியில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாகளிலும் உழவர் சந்தை அமைக்கப்பட்டது.அதன்மூலம், விவசாயிகள் பயனடைந்து வந்தனர். மேலும், பொதுமக்களும் உழவர் சந்தையில் தரமான காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கி பயன் பெற்று வந்தனர்.

இந்நிலையில், செங்கம் உழவர் சந்தையில் நாளுக்கு நாள் இடை தரகர்கள் மற்றும் சமுக விரோத குப்பல் அத்துமீறி நுழைந்து தங்களை விவசாயிகள் எனகூறிக் கொண்டு வெளிஇதுகுறித்து கடந்த 7ம் தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது.இதன் எதிரொலியாக கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி நடவடிக்கையின் பேரில் நேற்று காலை செங்கம் உழவர் சந்தையில் வேளாண்மை துணை இயக்குனர் ஹரிகுமார் ஆய்வு செய்தார். அப்போது, விவசாயிகளிடம் குறைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.மேலும், உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு முன்னூரிமை அடிப்படையில் விற்பனை செய்யவும், பொதுமக்கள் பயன் பெறும் வகையில் விதிகள் கடை பிடிக்கப்படும். மேலும், பொதுமக்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையூறு ஏற்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்தார்.இதில் உழவர் சந்தை அலுவலர்கள் கென்னடி, ஐயப்பன். வேளாண்மை துறை உதவி அலுவலர் ஜெயசீலன் உட்பட பலர் உடனிருந்தனர்.

=============================================================

Related Stories:

>