×

நவீன காதுகேட்கும் திறன்கண்டறியும் கருவி அறிமுகம்

திருவாரூர், மார்ச் 6: திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகள் முதல் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் திறனை கண்டறிவது குறித்து நவீன கருவி துவக்க விழா நடைபெற்றது.
இதனை திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் விஜயகுமார் துவக்கி வைத்தார். இதுகுறித்து திருவாரூர் மருத்துவ கல்லூரி டீன் முத்துக்குமரன் கூறுகையில், பொதுவாக குழந்தைகள் காது கேட்கும் திறன் குறைவாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் இயல்பாக பேச இயலாது.இந்நிலையில் இந்த நவீன ரக கருவி மூலம் காது கேட்கும் திறன் குறைவாக உள்ள குழந்தைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். மேலும் இந்த கருவி மூலம் குறைபாடுகள் கண்டறியப்பட்டு உரிய அறுவைசிகிச்சை செய்யப்படும் பட்சத்தில் காது கேட்கும் திறன் கிடைக்கும். மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கட்டணம் இல்லாமல் அறுவை சிகிச்சையினை செய்து கொள்ளலாம். எனவே பொதுமக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று பேசினார்.நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி துணைமுதல்வர் ராஜாராமன் மற்றும் மருத்துவர்கள் கண்ணன், ராஜா, ராமச்சந்திரன், தர்மராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Introduction ,hearing ,
× RELATED பெண்களின் உடல்நலத்திற்காக...