×

ராயநல்லூர் ஊராட்சியில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தேசிய கோமாரி நோய் தடுப்பூசி திட்டத்தின்கீழ் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ராயநல்லூர் ஊராட்சியில் நேற்று நடைபெற்றது. கால்நடை மருத்துவர் ராமலிங்கம் தலைமையில் உதவி கால்நடை மருத்துவர்கள் காவ்யா, விஸ்வேந்தர் ஆகியோர் தலைமையில் 300 கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போட்டனர். முகாமை மன்னார்குடி கோட்ட உதவி இயக்குனர் ஜான்சன் சார்லஸ் ஆய்வு செய்தார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : vaccination camp ,Rayanallur ,
× RELATED கோவில்பட்டியில் வெறி நோய் தடுப்பூசி முகாம்