×

இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க அறிவுறுத்தல்

மன்னார்குடி, மார்ச் 6: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கோட்டூர் வட்டார வளமையம் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து பள்ளி செல்லா மற்றும் இடைநின்ற மாணவர்களை கண்டறியும் கூட்டு ஆய்வுப் பணி பெருகவாழ்ந்தான் அருகே நொச்சியூரில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. நொச்சியூர் சமத்துவபுரம் பகுதியில் ஆய்வினை ஊராட்சி மன்ற தலைவர் இனியசேகரன் தொடங்கி வைத்தார். தொடர் வருகையின்றி உள்ள மாணவர்கள், நீண்ட நாட்களாக பள்ளிக்கு வராத மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கு மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுக்கு ஆலோசனை மற்றும் கவுன்சிலிங் வழங்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் மிகவும் நலிந்த பிரிவினர்கள் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு பழங்குடியினர் சாதிச்சான்று கிடைக்கப் பெறாததால் எங்களுக்கு வேலைவாய்ப்பில் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்று தெரிவித்தனர்.

மேலும் திருமேனி ஏரி நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் ஆய்வு நடைபெற்றது. அப்போது கல்வித்துறையும் அரசும் பழங்குடியினர் சாதிச் சான்று வழங்குவதற்கு ஆவண செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.ஆய்வில் சமத்துவபுரம் பள்ளியின் தலைமையாசிரியை ரோஸி, சித்தமல்லி ஆதிதிராவிடர் நலப்பள்ளி தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக சமூகப்பணியாளர் அபிராமி, வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வமணி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சக்திவேல், சிவராமகிருஷ்ணன், சிவசங்கரி, அனிதா, ராதிகா சிறப்பாசிரியர்கள் வீரபாண்டியன், சரண்யா, சங்கீதா, சசிகலா, தமிழரசி பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் வனிதா, சமத்துவபுரம் வார்டு உறுப்பினர் ராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED புதுச்சேரியில் நாளை மதுக்கடைகள்...