×

நீடாமங்கலம்: 4 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தம்

நீடாமங்கலம், மார்ச் 6: திருவாரூர் மாவட்ட சைல்டு லைன் 1098க்கு வந்த தகவலை தொடர்ந்து நீடாமங்கலத்தில் நடக்க இருந்த 4 குழந்தை திருமணங்கள் ஒரே நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி காங்கேயன் திடலில் பெரம்பலூர், திண்டுக்கல், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 18 வயதுக்குட்பட்ட 4 குழந்தைகளுக்கு நேற்றுமுன்தினம் மாலை 4 மணிக்கு காங்கேயன் திடலில் திருமணம் ஏற்பாடு நடைபெறுவதாக மாவட்ட சைல்டுலைன் 1098க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் செல்வராஜ், குழந்தைகள் நலக்குழு தலைவர் ஜீவானந்தம், உறுப்பினர் மனோகர், சைல்டு லைன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், அணி உறுப்பினர் மரகதமணி, சமூகநலத்துறை ஊர்நல அலுவர்கள் ரேவதி, சுதா, வருவாய் ஆய்வாளர் கதிரவர், விஏஓ துரை, அந்தோணி உள்ளிட்டடோர் சம்பவ இடத்திற்கு சென்ற விசாரணை செய்ததில் உண்மை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து நீடாமங்கலம் காவல்துறை உதவியுடன் நடக்க இருந்த 4 குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கு குழந்தை திருமண தடைச்சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

நேற்று காலை திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள குழந்தைகள் நலக்குழுவில் ஆஜர் படுத்த குழந்தைகளை அழைத்து சென்றனர். இதனையறிந்த மாவட்ட கலெக்டர் உத்தரவுபடி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகலாதன், மரகதமணி உள்ளிட்ட கள உறுப்பினர்கள், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் முத்தமிழ்ச்செல்வி மற்றும் சமூக பாதுகாப்பு பணியாளர்கள், வருவாய்துறை பணியாளர்கள் கலந்து கொண்டு காங்கேயன் திடலில் உள்ள அனைத்து மக்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் வளர்ப்பு, திருமண வயது தொடர்புடைய விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags : Needamangalam ,
× RELATED கொரோனாவால் ரகசியமாக நடக்கும் அவலம்;...