×

நீதிமன்ற பணியாளர்கள் உண்ணாநிலை போராட்டம்

திருத்துறைப்பூண்டி, மார்ச் 6: திருத்துறைப்பூண்டியில் நீதிமன்ற ஊழியர்களை இரவு 9 மணி வரை பணிபுரிய நிர்ப்பந்திக்கப்படுவதை கைவிடக்கோரி உண்ணாநிலை போராட்டம் நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நீதிமன்றத்தில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் கோரிக்கைகளை வலியுறுத்தி மதியம் உணவருந்தாமல் பணி புரிந்து வரும் காந்திய வழி போராட்டம் நடந்தது. நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற உண்ணாநிலை போராட்டத்தில்உயர்நீதி மன்ற சுற்றறிக்கைக்கு முரணாக திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் ஊழியர்களை இரவு 9 மணி வரை பணிபுரிய நிர்பந்திக்கப்படுவதை கைவிட்டு அலுவலக பணி நேரம் முடிந்ததும் வீட்டிற்கு செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதிமன்றத்தில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட தட்டச்சர் கணேசமூர்த்தி, சுருக்கெழுத்தர் கோமதி மற்றும் திருவாரூர் குற்றவியல் நீதித்துறை நடுவரால் பணிநீக்கம் செய்யப்பட்ட மாதவி ஆகியோரது பணியிடை நீக்கத்தை ரத்து செய்ய வேண்டும். திருத்துறைப்பூண்டி குற்றவியல் நீதித்துதுறை நடுவர் நீதி மன்றத்தில் ஊழியர்களை மனித நேயத்துடன் நடத்திடவும், அலுவலக நேரம் தவிர்த்து பிற நேரங்களில் பணிபுரிய வற்புறுத்தப்படுவதை கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி நீதிமன்ற ஊழியர்கள் உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : Court staff hunger strike ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு