×

கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மாணவர்களை பாதுகாக்க பள்ளியில் விழிப்புணர்வு

முத்துப்பேட்டை மார்ச் 6: முத்துப்பேட்டை அரசு பள்ளிகளில் கொரானா வைரஸ் தாக்குதலிலிருந்து மாணவர்களை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை ஒன்றியம் முழுவதும் கொரானா வைரஸ் தாக்குதலிலிருந்து மாணவர்களை பாதுகாக்க மாவட்ட கலெக்டர் ஆனந்த் உத்தரவின் பேரில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் கைகழுவுதல், வகுப்பறை தூய்மைப்படுத்துதல், பள்ளி வளாகம் கிருமிநாசினியை கொண்டு சுத்தம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் முத்துப்பேட்டை மருதங்காவெளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கொரானா வைரஸ் தாக்குதலிலிருந்து மாணவர்களை பாதுகாத்துக்கொள்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. தலைமையாசிரியர் திருஞானம் தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்தண்ணா முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தியாகராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு தன்சுத்தம் மற்றும் பள்ளி வளாகம் சுத்தம் கை கழுவும் முறைகள் ஆகியன குறித்து விளக்கி கூறினார். அனைத்து மாணவர்களும் கைகளை சோப்பினால் கழுவி சுத்தம் செய்தனர். பள்ளி வளாகம் வகுப்பறைகள் கிருமிநாசினி கொண்டு தூய்மைபடுத்தப்பட்டது. மேலும் பள்ளி வளாகம் பினாயில், பிளீச்சிங் பவுடர் கொண்டு தூய்மை செய்யப்பட்டது. இதில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர். ஆசிரியர் ராஜேஸ்வரன் நன்றி கூறினார்.

Tags : school ,coronavirus attacks ,
× RELATED ஊரடங்கு காலத்திலும் ரகசியமாக...