×

குழந்தைகள் பாதுகாப்பு திட்ட பயிற்சி

நீடாமங்கலம், மார்ச் 6: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் தாலுகா கொரடாச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியகுழு தலைவர் உமாபிரியா தலைமையில், துணைத்தலைவர் பாலச்சந்தர் முன்னிலையில் சமூக பாதுகாப்புதுறையின்படி ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் குறித்த பயிற்சி நடந்தது. மாவட்ட குழந்தைகள்பாதுகாப்பு அலகு சார்பாக கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு ஊராட்சி மன்றத் தலைவர்கள், மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் சேகர், கலியபெருமாள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் கமலராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.பயிற்சியில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் உள்ள 44 ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றியகழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் சிறப்பாக நடத்தப்படவேண்டும். கிராம அளவில் குழந்தை பாதுகாப்பினை உறுதி செய்து கிராம மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர்.மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புஅலுவலர் செல்வராசு குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்தும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு நோக்கம் குறித்தும் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும் என்றும் பேசினார். குழந்தை தோழமை கிராமம் உருவாக்குவது குறித்து மாவட்ட பயிற்றுநர் விஜயகுமார் மற்றும் பயிற்றுனர் முருகன் பேசினர்.

Tags :
× RELATED திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து...