×

அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு கே.என்.நேரு மாலை அணிவிப்பு

திருச்சி, மார்ச் 6: திமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கத்தின் 27ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு முதன்மை செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, முன்னாள் எம்எல்ஏக்கள் அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், மாநகர செயலாளர் அன்பழகன், பகுதி செயலாளர்கள் மதிவாணன், ராஜசேகர், தர்மராஜ், மாவட்ட பொருளாளர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன் மற்றும் மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

Tags : KN Nehru ,idol ,Dharmalingam ,
× RELATED கொரோனாவை தடுக்கும் விதமாக...