×

சகோதரர்களிடையே தகராறு சமாதானம் செய்ய முயன்ற முதியவருக்கு கத்தி குத்து

ஒரத்தநாடு, மார்ச் 6: ஒரத்தநாடு அருகே சகோதரர்களின் தகராறை சமாதானம் செய்ய முயன்ற முதியவருக்கு கத்திக்குத்து விழுந்தது. இதையடுத்து ஒருவரை போலீசார் கைது செய்தனர். ஒரத்தநாடு தாலுகா பாப்பாநாடு போலீஸ் சரகத்தை சேர்ந்த கண்ணுகுடி மேற்கு கிராமத்தை சேர்ந்தவர் ரங்கசாமி மகன் மதியழகன். இவருக்கும் இவரது சகோதரர் கண்ணதாசன் என்பவருக்கும் நிலப்பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில் இருவரும் தாக்கி கொண்டனர். அப்போது அதே ஊரை சேர்ந்த ராஜேந்திரன் (60) என்பவர் வந்து இருவரையும் சமாதானமாக செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரமடைந்து ராஜேந்திரனை மதியழகன் கத்தியால் குத்தினார். இதில் படுகாயமடைந்த ராஜேந்திரன் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாப்பநாடு போலீசார் வழக்குப்பதிந்து மதியழகனை கைது செய்து ஒரத்தநாடு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : brothers ,
× RELATED முதியவரிடம் வழிப்பறி