×

ஒருவர் கைது பல்லாங்குழியாக மாறிய குடந்தை பஸ் நிலைய சாலை தொடர் விபத்தால் மக்கள் அச்சம்

கும்பகோணம், மார்ச் 6: பாதாள சாக்கடை கழிவுநீரால் கும்பகோணம் நகர பேருந்து நிலையத்துக்கு செல்லும் சர்வீஸ் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுவதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் நகர பேருந்து நிலையத்துக்கு பேருந்துகள் அனைத்தும் புதிய பேருந்து நிலைய ஓரத்தில் உள்ள சர்வீஸ் சாலை வழியாக வந்து நகர பேருந்து நிலையத்துக்குள் செல்ல வேண்டும். மேலும் ஜான்செல்வராஜ் நகருக்கு செல்வதற்கும், கும்பகோணம் நகர பகுதிக்குள் செல்வதற்கும் கும்பகோணம் பகுதியை சேர்ந்த பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என அனைவரும் சர்வீஸ் சாலையை தான் பயன்படுத்துவர். இதனால் இந்த சாலையில் எந்நேரமும் வாகனங்களின் போக்குவரத்து அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக பாதாள சாக்கடை மேன்ஹோல்கள் அடைத்து கொண்டதால் சாலைகள் பெயர்ந்து உள்வாங்கி பள்ளமாக உள்ளது. அதில் கழிவுநீ–்ர் தேங்கி நிற்பதால் பள்ளம் இருப்பது தெரியாமல் அதன் வழியாக பைக்கில் செல்பவர்கள், பாதசாரிகள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளத்தில் விழுந்து விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். சாலை பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு வாகனங்கள் செல்லும்போது நடந்து செல்லும் பாதசாரிகள்மேல் தண்ணீர் தெளித்து விடுகிறது. இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்தும் சாலைகளை சீரமைக்காமல் அலட்சியபோக்கோடு இருந்து வருகின்றனர்.

3 ஆண்டுகளுக்கு முன் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. ஆனால் தரமான வகையில் சாலை அமைக்காததால் கும்பகோணம் பேருந்து நிலையத்தின் பல பகுதிகள் உள்வாங்கி கழிவுநீர் கலந்து அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே கும்பகோணம் நகர பேருந்து நிலையத்துக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக இருப்பதால் அரை விரைந்து சீரமைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : bus station road accident ,Kundantai ,
× RELATED நுாதன போராட்டம் நடத்த பக்தர்கள்...