×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு ஜெகதீஸ்வரர் கோயில் அம்பாளுக்கு சிறப்பு யாகம் மாணவர்கள் கல்வி நலன் கருதி

மணமேல்குடி, மார்ச் 6:மணமேல்குடி ஜெகதீஸ்வரர் கோயிலில் மாணவர்களின் நலன் கருதி ஜெகதீஸ்வரர் கோயிலில் அம்மாளுக்கு சிறப்பு யாகம் நடந்தது. மணமேல்குடி ஜெகதீஸ்வரர் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும். இந்த ஆலயத்தில் கல்விக்கு அதிபதியான பாலசரஸ்வதி அம்பாளுக்கு தனி கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலில் அரசு தேர்வு எழுதும் மாணவர்களின் கல்வி நலன் கருதி யாகசாலை அமைத்து சிறப்பு யாகம் வளர்க்கப்பட்டது.

சிறப்பு அலங்காரத்தில் பாலசரஸ்வதி அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் நடந்தது. இந்த பூஜையில் ஏராளமான பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட நோட்டு, பேனா வழங்கப்பட்டது. பூஜைக்கான ஏற்பாட்டை கோயில் நிர்வாகம் செய்திருந்தது.

Tags : Expectation Jagadeeswarar Temple ,Ambal ,
× RELATED திருமங்கலம் அருகே கோயில்...