×

பொதுமக்கள் அதிர்ச்சி கோடை காலம் துவங்கும் முன் விராலிமலையில் 8 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் சப்ளை

விராலிமலை, மார்ச் 6: விராலிமலை ஊராட்சியில் 8 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுவதால் போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய காவிரி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி நாள் ஒன்றுக்கு 4 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் விராலிமலையில் மட்டும் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. 45க்கும் மேற்பட்ட தெருக்குள் உள்ளது. 2000க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளது. இதன்காரணமாக சாதாரணமாக சுமார் 6 முதல் 8 நாட்களுக்கு ஒரு முறை தெருக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

8 நாட்களுக்கும் குடிநீர் வருவதால் விராலிமலை பகுதி மக்கள் தண்ணீரை டேங்குகளில் பிடித்து சேமித்து வைத்துக்கொண்டு குடிநீர் தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஊராட்சிகளில் இருந்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் கலந்து விநியோகிக்கப்படும்.
அதன்படி 8 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் வழங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பது அதிகளவில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிதுதான் என கண்டறியப்பட்டது. இதற்கு முன்பிருந்து ஊராட்சிகள் உதவி இயக்குநர் நேரிடையாக விராலிமலையில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தார். குடிநீர் இணைப்பு வழங்கிட கூடாது என அறிவுறுத்தியிருந்தார். அதன்பிறகு விராலிமலையில் கடந்த சில ஆண்டுகளாக குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் தற்போது பருவமழை முடிந்து வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் ஒரு சூழல் உள்ளது. இதனை கருத்தி கொண்டு ஊராட்சி நிர்வாகம் போர்கால நடவடிக்கையை மேற்கொண்டு சீராக குடிநீர் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மேலும் விராலிமலை ஊராட்சியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் ஆபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே போர்க்கால அடிப்படையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர் முரளி கூறுகையில் விராலிமலையில் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளவு கொண்ட தண்ணீர் தொட்டி மூலம் பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. இங்கு சுமார் 2000 குடிநீர் இணைப்புகளே அதிகமாக உள்ளது. காவிரி நீர் என்றாலும் அதுவும் குறிப்பிட்ட நாட்கள் தான் பயன்படுத்த முடியும். தண்ணீரை மிகவும் கிராமத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பாக வைக்க மாட்டார்கள். குறிப்பாக நமது கைகள், நாம் பயன்படுத்தும் பாத்திரங்கள், துணிகள் இவைகள் மூலம் எளிதில் தண்ணீரில் கெட்ட பாக்டீரியாக்கல் பரவும். அப்படி பரவும் போது அந்த நீரில் உள்ள குளோரின் எதிர்த்து போராடும்.

அப்படி போராடும் போது குளோரின் அளவும் குறைந்துவிடும். இப்படிபட்ட சூழ்நிலையில் 8 நாட்கள் வரை பொதுமக்கள் குடிநீரை பயன்படுத்துவது பொதுமக்களுக்கு உடல் உபாதைகளை ஏற்படுத்தும். எனவே குறைந்த நாட்களில் தண்ணீர் வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags : start ,
× RELATED பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில்