×

பொதுமக்கள் எதிர்பார்ப்பு காட்டகரம் கிராமத்தில் நூறு நாள் வேலைதிட்டம் துவக்கம்

ஜெயங்கொண்டம், மார்ச் 6: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காட்டகரம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் துவங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் ராமசெல்வதுரை தலைமை வகித்தார். கிராம முக்கியதர்கள் இளையராஜா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காட்டகரம் ஊராட்சியில் உள்ள 3, 4 மற்றும் 9வது வார்டுகளில் நூறு நாள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை ஜெயங்கொண்டம் ஒன்றியக்குழு தலைவர் ரவிசங்கர் துவக்கி வைத்து பேசினார்.

ஒன்றியக்குழு தலைவருக்கு ஊராட்சியின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. மேலும் நிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன், ராஜாபெரியசாமி, விஜயகுமார், தமிழ்செல்வன், சந்திரமோகன் மற்றும் இளைஞர் அமைப்பினர் ஏராளமான பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Public Expectation Launches 100 Day Program ,Katakaram Village ,
× RELATED அடுத்த வாரம் வருகிறது 100 வென்டிலேட்டர்