×

கலெக்டர் பேச்சு மின்கம்பி உரசியதில் சோளத்தட்டை தீயில் எரிந்து நாசம்

பாடாலூர், மார்ச் 6: ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே டிராக்டர் டிப்பரில் ஏற்றிச் சென்ற சோளத்தட்டையில் மின்சார கம்பி உரசி தீ பிடித்து எரிந்து சேதமடைந்தது. ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகேயுள்ள சீதேவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர். விவசாயியான இவர் பசுமாடுகளும் வளர்த்து வருகிறார். அதற்காக பாடாலூர் அருகே உள்ள ஒருவருடைய விவசாய நிலத்தில் இருந்து சோளத்தட்டையை விலைக்கு வாங்கி தன்னுடைய நிலத்திற்கு டிராக்டர் டிப்பரில் ஏற்றி சென்றார். டிராக்டரை சுரேஷ் என்பவர் ஓட்டிச் சென்றார்.

அப்போது கூத்தனூர் சாலையில் டிரான்ஸ்பார்மர் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக சாலையில் இருந்த மின்சார கம்பிகள் சோளத்தட்டையில் உரசி தீ பிடித்தது. உடனடியாக டிராக்டரில் இருந்து டிப்பரை மட்டும் கழட்டி விட்டதால் டிப்பர் மற்றும் சோளத்தட்டை எரிந்து நாசமானது. தீப்பிடித்த எரிந்த டிப்பர் மற்றும் சோளத்தட்டை மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பாடாலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : collector ,
× RELATED ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகத்தில்...