×

'ஐடிஐ பயிற்சி முடித்தவர்கள்'

அரியலூர், மார்ச் 6: தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழில்களில் பயிற்சி பெற்றுள்ள மாணவர்கள் யாரிடமும் வேலைக்கு தேடி செல்லாமல் இங்கு பெற்ற பயிற்சியினை பயனுள்ளதாக ஆக்கிக்கொண்டு தொழில் முனைவோர்களாக மாறி தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் கலெக்டர் ரத்னா பேசினார். அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. கலெக்டர் ரத்னா தலைமை வகித்து பேசியதாவது: அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையம் 1964ம் ஆண்டு துவங்கப்பட்டு பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்குவதில் முன்னணி தொழிற்பயிற்சி நிலையமாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஆண்டிமடத்தில் அரசு தொழிற் பயிற்சி நிலையம் துவங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகள் பட்டமளிப்பு விழா நடந்தது. 3வது ஆண்டாக தற்போது பட்டமளிப்பு விழா நடக்கிறது.

அரியலூர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த 70 பயிற்சியாளர்கள், ஆண்டிமடம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த 30 பயிற்சியார்களுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது. இன்று பட்டம் பெறும் உங்களின் தனிச்சிறப்பு பிட்டர், டர்னர், வெல்டர், சீட்மெட்டல் ஒர்க், ஒயர்மேன், டிராப்ட்மேன் உள்ளிட்ட 8 விதமான அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் தொழில்களில் பயிற்சி பெற்றுள்ளீர்கள். அதன் வாயிலாக நீங்கள் யாரிடமும் வேலைக்கு தேடி செல்ல வேண்டிய தேவை ஏற்படாமல் இங்கு பெற்ற பயிற்சியை பயனுள்ளதாக மாற்றி தொழில் முனைவோர்களாக மாறி தன்னம்பிக்கையுடன் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்றார்.

அரசு தொழிற்பயிற்சி நிலைய முதல்வர்கள் நாகராஜன் (அரியலூர்), முத்துகுமரன் (ஆண்டிமடம்), மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரமேஷ், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அசோக்ராஜன், மாவட்ட திறன் பயிற்சி அலுவலர் செல்வம், நிர்வாக அலுவலர் தனபால் மற்றும் பயிற்சியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

Tags : ITI ,
× RELATED மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த...