பெரம்பலூர்- துறையூர் இடையே சாலைப்பணி குழாய்களை உடைப்பதால் குடிநீர் வீணாகும் அவலம்

பெரம்பலூர், மார்ச் 6: பெரம்பலூர் துறையூர் சாலையில், சாலைப் பணிகளின் போது கவனக்குறைவாக தரையில் பதிக்கப் பட்டுள் ள குடிநீர்க் குழாய்களை உடைத்து விடுவதால் 10அடி உயரத்திற்கு பீய்ச்சியடித்து வெளியேறும் குடிநீர்.சாலை யோரத்தில் குளம்போல் தேங்கி நிற்கிறது.

70 ஆயிரம் மக்கள்தொகை யை கொண்ட, மாவட்டத் தலைநகர் அந்தஸ்து கொ ண்ட, இரண்டாம் நிலை நக ராட்சியான பெரம்பலூரு க்கு, கடந்த பத்தாண்டுகளு க்கு முன்பு திமுக ஆட்சியில் திட்டமிடப்பட்டு, திருச்சி மாவட்டம், கொள்ளிடம் ஆற்றி லிருந்து குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழ்நாடு குடி நீர் வடிகால் வாரியத்தின் மூலம் லால்குடி தாலுகா தாளக்குடி அருகே தண்டா ங்கோரை எனும் இடத்திலி ருந்து ராட்சத ஆழ்குழாய் கிணறுமூலம் பெறப்படும் குடிநீர் மண்ணச்சநல்லூர் தாலுகா, பெரகம்பி, ஆல த்தூர் தாலுகா செட்டிக்கு ளம், பெரம்பலூர் தாலுகா சத்திரமனை, தம்பிரான்பட் டி, ரெங்கநாதபுரம், செஞ்சேரி வழியாக பெரம்பலூர் நகராட்சிக்கு கொண்டுவர ப்படுகிறது.

இதற்காக சா லையோரங்களில் பதிக்க ப்பட்ட குடிநீர் குழாய்களில், சாலைஅமைக்கும் பணிக ளின்போதோ, கனரகவாக னங்கள் சாலையோரத்தில் இறங்கிச் செல்லும்போ தோ ஏற்படும் அழுத்தம் கா ரணமாகவும் அடிக்கடி குடி நீர்க் குழாய்கள் உடைப்பெடுக்கப்படுவது தீர்வு காண ப்படாத ஒன்றாகவே உள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் துறையூர் சாலையில் அரசு தலைமை மருத்துவமனை தொடங்கி, செஞ்சேரி புறவ ழிச்சாலை வரையிலான 3.2 கிலோமீட்டர் தூரமுள்ள சாலை சென்டர் மீடியனு டன் இரு வழிச்சாலையாக அமைக்கப்படும் பணி கட ந்த எட்டு மாதங்களாக நட ந்து வருகிறது. இதில் சுவா மி திரையரங்கம் அடுத்த அப்புசாமி நகர் அருகே தரைப்பாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இதில் கடந்த 29ம் தேதியே அப்ப குதியில் பொக்ளைன் மூலம் தோண்டும்போது பெரம்ப லூர் நகராட்சிக்கு கொண் டுசெல்லப்படும் குடிநீர்க் கு ழாய் உடைப்பெடுத்து பத் தடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து ஆறாக சென்றது.

இந்நிலையில் நேற்று மீண்டும் தரைப்பாலம் அ மைக்கும் பணிகளுக்காக இயந்திரங்களை வைத்து சரி செய்யும் போது, மீண்டும் குடிநீர்க் குழாய் உடைப்பு எடுத்து பல லட்சம் லிட்டர் தண்ணீர், குழாயில் இரு ந்து வெளியேறியது. அதே நேரம் அப்பகுதியில் இரு ந்த சேறு கலந்த கழிவு நீரும் அந்த குழாய்க்குள் உள்ளே புகுந்தது. இதனை மணிக்கணக்கில் போராடித்தான் அங்கு பணி செய்த ஊழியர்கள் அடைத்தனர்.

சாலைப்பணிகள் நடக்கும் போது சாலையோரம் பதிக் கப் பட்ட குடிநீர்க்குழாய் உடைபடாமல் கவனமாகப் பணிபுரியவேண்டி, சம்மந் தப் பட்ட நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் எச்சரி க்கை விடுக்காத பட்சத்தில், சம்மந்தப்பட்ட தமிழ்நாடு குடிநீர் வடிகால்வாரியமோ, நகராட்சி நிர்வாகமோ அத னை தொடர்ந்து கண்கா ணித்து வராதபட்சத்தில் இதுபோன்ற அவலங்கள் அடிக்கடி நடப்பதற்கு முடி வே இல்லை.

இந்நிலை யில் உடைபட்ட குடிநீர்க் கு ழாய் வழியாக உட்புகுந்த கழிவுநீரோடு பொதுமக்க ளுக்கு நேரடியாக விநியோ கித்து விடாமல், குடிநீரை குளோரினேசன் செய்து சுத்திகரித்தப் பிறகு விநி யோகிக்க உத்தரவிட வே ண்டும் என பொதுமக்களு ம், சமூக ஆர்வலர்களும் மா வட்ட நிர்வாகத்திற்கும், நக ராட்சி நிர்வாகத்திற்கும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Stories:

>