×

என்.ஆர்.எச்.எம் ஊழியர்கள் பணிநிரந்தம், சம்பள உயர்வு கோரி நெற்றியில் நாமத்துடன் போராட்டம் 4ம் நாள் நூதனமாக நடந்தது

காரைக்கால், மார்ச் 6: பணிநிரந்தம், சம்பள உயர்வை வலியுறுத்தி, காரைக்கால் என்.ஆர்.எச்.எம் (தேசிய சுகாதார இயக்கக திட்டம்) ஊழியர்கள் நேற்று 4ம் நாளாக மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில், நெற்றியில் ஞாமம் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிநிரந்தம், சம்பள உயர்வை வலியுறுத்தி, காரைக்கால் என்.ஆர்.எச்.எம்(தேசிய சுகாதார இயக்ககத் திட்டம்) ஊழியர்கள் நேற்று 4ம் நாளாக மாவட்ட நலவழித்துறை அலுவலக வாயிலில் நெற்றியில் ஞாமம் போட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு நலவழித்துறையின் கீழ் இயங்கும் என்.ஆர்.எச்.எம்-ல் சுமார் 600 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பல்வேறு நிலைகளின் கடந்த 13 ஆண்டுகளுக்கும் மேலாக குறைந்தபட்ச தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு சமவேலைக்கு சம சம்பளம் என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கப்பவில்லை. இதனிடையே, என்.ஆர்.எச்.எம் ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் வாயிலாக கடந்த 2018 பிப்ரவரி மாதம் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் என்.ஆர்.எச்.எம் திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களை, நிரந்தர பணிநியமனத்தின் போது 33சதவீத ஒதுக்கீடு வழங்குவதாக கொள்கை முடிவெடுத்தது.

ஆனால், அதற்கான எவ்வித முயற்சியையும் இதுவரை அரசு எடுக்கவில்லை. அதுபோல், குறைந்த அளவே தொகுப்பூதியம் பெற்று வரும் ஊழியர்களுக்கு மத்திய அரசின், சுகாதார இயக்ககம் வருடத்திற்கு 5சதவீத ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தியும், கடந்த 2019-20 ம் நிதியாண்டுக்கான ஊதிய உயர்வு தற்போது நிதியாண்டு முடியவுள்ள நிலையிலும் இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, புதுச்சேரி அரசு அமைச்சரவையில் எடுத்த முடிவின்படி 33சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் சுகாதாரத்துறையில் உள்ள நிரந்தர பதவிகளில் என்.ஆர்.எச்.எம் தொகுப்பூதிய ஊழியர்களை 33 சதவிகிதம் பணிநிரந்தம் செய்ய வேண்டும், கடந்த 2019-20 ம் நிதியாண்டுக்கான 5 சதவிகித சம்பள உயர்வை நிலுவையுடன் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, புதுச்சேரி சுகாதார இயக்க ஊழியர்கள் சங்கம் சார்பில், கடந்த 2ந் தேதி முதல், தொடர் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். நேற்று 4ம் நாளாக நெற்றியில் நாமம் போட்டு, கையில் தட்டு ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு, சங்க செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். தலைவர் சுந்தரவடிவேலு, பொருளாளர் புவனேஸ்வரி, துணைத்தலைவர் தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். காரை பிரதேச அரசு ஊழியர் சம்மேளன கௌரவ தலைவர் ஜெய்சிங், பொதுச் செயலாளர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

Tags : NRHM ,Strike ,Workday ,
× RELATED பஞ்சாப் – அரியானா எல்லையில் விவசாயிகள் போராட்டம்: 53 ரயில்கள் ரத்து