×

பொதுமக்கள் கோரிக்கை கொத்தங்குடி, தொழுதூரில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம்

வேதாரண்யம், மார்ச் 6: கொத்தங்குடி, தொழுதூரில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய மேலாளர் பழபக்கிரிசாமி தீர்மானங்களை வாசித்தார். கூட்டத்தில் ஒன்றிய குழு துணைத் தலைவர் ஜெகதீஷ் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தமிழரசி, ரம்யா, தீபா, மகேந்திரன், உதயகுமார், கஸ்தூரி, ஞானசேகரன், செல்வி, மாசிலமாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஜீப் ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய தனி அலுவலர் இதுநாள்வரை முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை ரத்து செய்து விட்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் 2019 மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்கள் பிரதிநிதிகளை கொண்டு அமைக்கப்படும் நியமனக் குழுவின் மூலம் காலிப்பணியிடங்களை நிரப்ப தீர்மானிக்கப்பட்டது. தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்தில் சித்தாய்மூர், மணக்குடி, கோவில்பத்து ஊராட்சிகளில் உள்ள அரசு துணை சுகாதார நிலைய கட்டிடங்களை பழுது நீக்கம் செய்தல், பாங்கல் ஊராட்சியில் மகளிர் சுகாதார வளத்தினை சீர் செய்வது, தலைஞாயிறு ஒன்றிய பகுதியில் அவசர அவசியம் கருதி குடிநீர் சம்மந்தப்பட்ட பணிகளை செய்வது காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டதற்கு  தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, சிறப்பு வேளாண்மை மண்டலத்தில் ஏற்கனவே நடைபெற்று விவசாயத்திற்கு குந்தகம் விளைவிக்கும் திட்டப்பணிகளை ரத்து செய்ய வேண்டும்.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு தற்போது பத்திரப்பதிவு திருத்துறைப்பூண்டி பத்திர பதிவு அலுவலகத்தில் நடைபெற்ற வருகிறது. இதனை திருக்குவளை பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு மாற்றிட அரசை கேட்டுக்கொள்வது. கொத்தங்குடி, தொழுதூர் பகுதியில் புதிய துணை ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க கேட்டுக்கொள்வது, நாலுவேதபதி ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண் மருத்துவரை நியமிக்க வேண்டும். தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் முதியோர் ஓய்வூதியம் பெற தகுதியுள்ள நபர்களை ஒன்றியக்குழு உறுப்பினர்களை கண்டறிந்து அவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க ஆவன செய்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags : Kodungudi ,
× RELATED கோடங்குடி கிராமத்தில் ஓராண்டாக வீணாகும் கொள்ளிடம் கூட்டு குடிநீர்