×

விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் உலக கேட்பு திறன் தின கொண்டாட்டம்

சேலம், மார்ச் 6: விநாயகா மிஷன்ஸ் ஆராய்ச்சி நிறுவனத்திற்குட்பட்ட விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில், உலக கேட்புதிறன் தினம் கொண்டாடப்பட்டது. ஒவ்வொரு வருடமும் மார்ச் 3ம் தேதி உலக கேட்புத்திறன் தினம் கடைபிடிக்கப்படுகிறது. விம்ஸ் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துறையின் இயக்குனர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். விம்ஸ் மருத்துவமனை மருத்துவ இயக்குனர் டாக்டர் மீனாட்சிசுந்தரம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். கேட்புத்திறன் மற்றும் பேச்சு பயிற்சியாளர் வாசுகி ராவ் கலந்து கொண்டு, கேட்புத்திறன் மற்றும் பேச்சு பயிற்சியின் மருத்துவம் சார்ந்த சந்தேகங்களை விளக்கினார்.

இவ்விழாவில் விம்ஸ் மருத்துவமனை அறுவை சிகிச்சை நிபுணர்களான மருத்துவர் சிவகுமார்(காது மூக்கு தொண்டை), மருத்துவர் கெளதம்(மூளை நரம்பியல்), மருத்துவர் மோகன்பாபு(சிறுநீரகம்), மருத்துவர் தேவந்தி(தர கட்டுப்பாடு), மருத்துவர் சிவ சுப்பிரமணியம்(இதயம்), மருத்துவர் சசிகலா(நுண்ணுயிரியல்), மருத்துவர் அன்பு வடிவு(குழந்தைப்பேறு) ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கேட்புத்திறன் மற்றும் பேச்சு பயிற்சியாளர் ரோஷினி, செவித்திறன் துறை ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags : World Hearing Day Celebration ,Department ,
× RELATED குழந்தைகளுக்கு நைட்ரஜன் ஐஸ் கலந்த...