×

கரூர் கோவை சாலை சக்தி நகரில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதார கேடு

கரூர், மார்ச் 6: கரூர் கோவை சாலை சக்திநகர் பகுதியில் குப்பைமேடு அகற்றாததால் சுகாதாரகேடு ஏற்பட்டுள்ளது. கரூர் கோவை சாலை சக்திநகர் பகுதியில் சாலையோரம் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. குப்பைகள் தொடர்ந்து அகற்றப்படாததால் மேடாகி குவிந்து விட்டது. இதுமக்கிப்போய் காணப்படுகிறது. குப்பைமேடு காரணமாக இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.

உள்ளாட்சித்துறை நிர்வாகம் குப்பைமேட்டை அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தும் நீண்டகாலமாக கண்டுகொள்ளப்படாத கோரிக்கையாகவே இருக்கிறது. உடனடியாக குப்பைமேட்டை அகற்றி சுகாதாரகேட்டில் இருந்து காப்பாற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : city ,garbage dump ,Karur Kovai Road Shakti ,
× RELATED மெட்ரோ ரயில், மாநகர பேருந்து உள்ளிட்ட...