×

கரூர் மார்க்கெட் அருகில் பயன்பாடின்றி கிடக்கும் நிழற்குடையால் அவதி

கரூர், மார்ச் 6: கரூர் மார்க்கெட் அருகே அமைக்கப்பட்டுள்ள நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். கரூர் மாவட்டம் நெரூர், வாங்கல் போன்ற பகுதிகளில் இருந்து கரூர் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மார்க்கெட் வழியாக செல்கிறது. இந்த பகுதியினர் கரூர், வெங்கமேடு போன்ற பகுதிகளுக்கு செல்லும் வகையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மார்க்கெட் வளைவு பாதையோரம் நிழற்குடை அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தற்போதைய நிலையில், பயணிகள் பயன்டுத்தும் வகையில் இதன் நிலை இல்லாமல் உள்ளது. இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத பலர் வந்து தங்கிச் செல்வதாகவும், பகல் நேரங்களில் கூட பலர் படுத்து உறங்குவதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, சாதாரண பயணிகள் இதனை பயன்படுத்திட முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி இந்த மார்க்கெட் வளாகம் அருகேயுள்ள நிழற்குடையை பயணிகள் பயன்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : market ,Aruvikkallakkadaval karur ,
× RELATED போடியில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரம்