×

கரூர் பகுதியில் விவசாய நிலங்களில் மது அருந்துவதால் சுகாதார கேடு

கரூர், மார்ச் 6: விளைநிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் குடிமகன்கள் அமர்ந்து சரக்கு அடிப்பதை கட்டுப்படுத்த அதிகாரிகள் முயல வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.கரூர் நகராட்சிக்குட்பட்ட புறநகர்ப்பகுதிகளில் விளைநிலங்கள் மற்றும் விவசாய நிலங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படுகிறது. சில கடைகளில் பார் வசதியில்லை.

இதன் காரணமாக, தினமும் ஏராளமான குடிமகன்கள் சரக்கினை வாங்கி, விவசாய நிலங்களில் அமர்ந்து சரக்கு அடித்து விட்டு, பிளாஸ்டிக் பொருட்களை அப்படியே போட்டு விட்டு செல்வது கரூர் நகரப்பகுதிகளில் தொடர்கதையாக நடைபெற்று வருகிறது.நிலங்களில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்கி பல்வேறு சுகாதார சீர்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்திட வேண்டும் என பொதுநல ஆர்வலர்களும் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், இதுநாள் வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. நகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை, ராயனூர், வெங்கக்கல்பட்டி, செல்லாண்டிபாளையம், வாங்கல் சாலை போன்ற பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்கதையாக உள்ளது.

எனவே, அனைத்து தரப்பினர்களின் நலன் கருதி, இதனை கட்டுப்படுத்திட தேவையான ஏற்பாடுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : lands ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்