×

குமாரபாளையத்தில் பைக் சாகசம் மூலம் சாலை விழிப்புணர்வு

குமாரபாளையம், மார்ச் 6: குமாரபாளையத்தில் பைக் சாகசம் செய்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. குமாரபாளையம் தனியார் கல்லூரியில், சாலை விதிமுறைகளை மதிக்க வலியுறுத்தி, சேலம் மோட்டார் சைக்கிள் கிளப்பை சேர்ந்த பைக் சாகச வீரர்கள், மோட்டார் பைக்கில் சாகசம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தலைகவசம் அணிய வேண்டும், செல்போன் பேசிக்கொண்டு வாகனங்களை ஓட்டக்கூடாது. குடிபோதையில் வாகனங்களை இயக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு கருத்துகளை வலியுறுத்தி, மோட்டார் பைக்கில் பல்வேறு சாகசங்களை செய்து காட்டினர்.

Tags : bike adventure ,Kumarapalai ,
× RELATED காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...