×

காளியம்மன் தேர்திருவிழா

குமாரபாளையம், மார்ச் 6: குமாரபாளையம் அனைத்து சமூக காளியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவில் நேற்று காளியம்மன் தேர்திருவிழா நடைபெற்றது. கோயில் வளாகத்தில் அலங்கரிக்கப்பட்ட தேரில், அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி புறப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், உள்ளூர் பிரமுகர்கள் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். ராஜவீதி வழியாக தேர் ஆடி அசைந்து சென்றது. மாடியிலிருந்து பக்தர்கள் தேர்மீது பழங்களை வீசி தரிசித்தனர். இரண்டாவது நாளான இன்று (6ம்தேதி) தேர்நிலையடையும்.

Tags : Kaliamman Election ,
× RELATED மாநில அளவிலான கைப்பந்து போட்டி