×

சேந்தமங்கலத்தில் அரசு கல்லூரி திறப்பு

சேந்தமங்கலம், மார்ச் 6: சேந்தமங்கலம் அடுத்துள்ள உத்திரகிடிகாவல் ஊராட்சியில், அரசு கலைக்கல்லூரிக்கு புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை,  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், கொல்லிமலை ஒன்றிய குழு தலைவர் மாதேஸ்வரி, சேந்தமங்கலம் ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய குழு உறுப்பினர் ஸ்ரீபாலன், நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணை தலைவர் ரமேஷ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் பாஸ்கர், தாசில்தார் ஜானகி உட்பட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Government College ,Chendamangalam ,
× RELATED பண்டைய மதுரை நகரம் செயல்பட்ட மணலூரில் அகழாய்வு பணிகள் துவக்கம்