×

அரசு பள்ளி மாணவர்களுக்கு கால் மிதியடி தயாரிக்க பயிற்சி

திருச்செங்கோடு , மார்ச் 6: திருச்செங்கோட்டில் கலைமகள் கல்வி நிலைய நடுநிலைப்பள்ளியில், எவரெஸ்ட் பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில், மாணவர்களுக்கு  கால் மிதியடி தயாரிப்பு பற்றிய சிறு தொழில் பயிற்சி வழங்கப்பட்டது. துவக்க  விழாவில் கலைமகள் கல்வி நிலையம் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்  செந்தில்குமார் வரவேற்றார். அனைவருக்கும் கல்வி இயக்கம், திருச்செங்கோடு வளமைய மேற்பார்வையாளர் (பொ) சந்திரசேகரன், பயிற்சியை தொடங்கி வைத்தார். அறக்கட்டளை நிர்வாகிகள் ஆகியோர் மாணவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பு தொழில் பற்றி எடுத்துரைத்தனர். மிதியடி தயாரிக்க தேவையான  இயந்திரம் மற்றும் உபகரணங்கள், எவரெஸ்ட் அறக்கட்டளை சார்பில் பள்ளிக்கு வழங்கப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். இடைநிலை ஆசிரியை உமா நன்றி கூறினார்.

Tags : Training for Public School Children ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி