×

அரசு பள்ளியில் மரக்கன்று நடும் சிறப்பு திட்டம்

நாமக்கல், மார்ச் 6: தண்ணீர்பந்தல்பாளையம் அரசு பள்ளியில் மரக்கன்று நட்டு பராமரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருச்செங்கோடு அருகேயுள்ள  தண்ணீர்பந்தல்பாளையம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் 50 மாணவர்கள் 50 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் துறையின் கீழ், தேசிய பசுமைப்படை மூலமாக நிதி பெறப்பட்டு, கடந்த 3 ஆண்டாக மரக்கன்றுகளை மாணவ, மாணவியர் நட்டு பராமரித்து வருகிறார்கள். இந்த பணியில் ஈடுபட்டு வரும் தேசிய பசுமைப்படை மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் சான்றிதழ்களை, பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் செல்லப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமை ஆசிரியர் (பொ) சசி, பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் சுகுணா மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

Tags : government school ,
× RELATED சிவகாசி அருகே மழையால் சேதமடைந்த அரசு பள்ளி: அதிகாரிகள் கவனிப்பார்களா?