×

குருபரப்பள்ளி அருகே வேன் மீது கார் மோதி 2 பேர் பலி

கிருஷ்ணகிரி, மார்ச் 6: குருபரப்பள்ளி அருகே வேன் மீது கார் மோதியதில் 2 பேர் பலியானதுடன், அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அந்திவாடியைச் சேர்ந்தவர் பில்லாரெட்டி. இவரது மனைவி கலா(40). பர்கூரை அடுத்த அச்சமங்கலத்தைச் சேர்ந்தவர் ராகவேந்திரன் (35). அக்கா & தம்பியான இவர்கள் நேற்று முன்தினம் இரவு காரில் ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பத்திற்கு ஒரு திருமண விழாவிற்கு செல்வதற்காக காரில் வந்து கொண்டிருந்தனர்.

அவர்கள் வந்த கார் கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி மேம்பாலம் அருகில் வந்த போது, முன்னால் சென்ற சரக்கு வேன் மீது மோதியது. விபத்தில் காரில் வந்த கலா சம்பவ இடத்திலேயே பலியானார். ராகவேந்திரன் படுகாயத்துடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். அப்போது பின்னால் வந்த லாரி டிரைவர் விபத்தை பார்க்க லாரியை நிறுத்தினார். அப்போது பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குருபரப்பள்ளி போலீசார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இதானல் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : car crashes ,Kurupparappalli ,
× RELATED தேனி அருகே இருசக்கர வாகனம் மீது வேன் மோதியதில் தம்பதி உயிரிழப்பு