×

ஓசூர் அருகே எருதாட்டம் கோலாகலம்

ஓசூர், மார்ச் 6: ஓசூர் அருகே முனீஸ்வரன் கோயில் விழாவையொட்டி நடந்த எருதாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. ஓசூர் அடுத்த காமன்தொட்டி கல்லுகுறிக்கி கிராமத்தில், பாரம்பரியம் மிக்க எருதுவிடும் விழா நேற்று நடைபெற்றது. முனீஸ்வரன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற எருதாட்டத்தில் 300க்கும் அதிகமான காளைகள் பங்கேற்றன. சூளகிரி, பேரிகை, தீர்த்தம், வேப்பனஹள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட காளைகளை, மருத்துவ பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டன. காலை 9 மணிக்கு தொடங்கிய எருதாட்டம் மதியம் 12 மணிவரை நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை கண்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்தனர். இதனை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்திருந்தனர். கூட்டத்தை கண்டு மிரண்ட சில காளைகள் முட்டியதில், காயமடைந்த பார்வையாளர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். கூட்டம் திரண்டதால், பாதுகாப்பு ஏற்பாடுகளை சூளகிரி போலீசார் மேற்கொண்டனர்.

Tags : burial ground ,Hosur ,
× RELATED ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை...