×

தர்மபுரி அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு

தர்மபுரி,  மார்ச் 6:தர்மபுரி அருகே டூவலரில் இருந்து தவறி விழுந்த வாலிபர்  பலியானார். படுகாயமடைந்த சிறுமியை மருத்துவமனையில் சிகிச்சைக்கு  சேர்த்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் ஏர்ரபயனஅள்ளியை சேர்ந்த சவுந்தர்  மகன் விக்னேஸ்வரன்(22). டிப்ளமோ படித்துள்ள இவர், கடந்த சில நாட்களாக  தர்மபுரி அந்தோணி காலனியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த  நிலையில் விக்னேஸ்வரன் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள பவதர்ஷினி(11)  என்ற சிறுமியை அழைத்துக் கொண்டு சொந்த வேலையாக பைக்கில் சேலம் நோக்கி  சென்றுள்ளார்.

அப்போது சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை  அருகே சாலையை கடக்கும் போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த பைக்கில் இருந்து  விக்னேஸ்வரன், பவதர்ஷினி ஆகியோர் கீழே சாலையில் விழுந்தனர். இதில்  படுகாயமடைந்த இருவரையும் மீட்ட அக்கம்பக்கத்தினர் தர்மபுரி அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விக்னேஸ்வரன் மேல்  சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால்  சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு விக்னேஸ்வரன் உயிரிழந்தார்.  பவதர்ஷினிக்கு தர்மபுரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு  வருகிறது. இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

Tags : Dharmapuri ,
× RELATED கேரளாவில் அன்னாசி பழத்தில் பட்டாசு...