×

டூவீலரில் பொருத்தியிருந்த எல்இடி விளக்குகள் உடைப்பு


அரூர்,  மார்ச் 6: அரூர் அடுத்த ஏ.பள்ளிப்பட்டி மயானம் அருகே, அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர்  பன்னீர்செல்வம் தலைமையில், ஏ.பள்ளிப்பட்டி போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர்.  தொடர்ந்து வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலர் மற்றும் கார்களை  நிறுத்தி, கண்களை கூசச்செய்து விபத்துக்கள் ஏற்பட காரணமாக உள்ள எல்இடி  விளக்குகள் பொருத்தி உள்ளதை அகற்றும்படி கூறினர். அந்தந்த வானகங்களின்  உரிமையாளர்களிடம் சுத்தியலை கொடுத்த அதிகாரி, எல்இடி விளக்குகளை உடைத்து  அகற்றச்செய்தார். மேலும், இவ்வகையான விளக்குகள் பொருத்துவதால் எதிரே வரும்  வானங்கள் எவ்வாறு விபத்தில் சிக்குகிறது என எடுத்துரைத்தார். தொடர்ந்து  வாகனங்களில் எல்இடி விளக்குகளை பொருத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் எச்சரித்து அனுப்பி  வைத்தார்.

Tags :
× RELATED டூவீலர் மீது கார் மோதி விபத்து