×

ராஜபாளையத்தில் லேசான மழைக்கே தாங்காத சாலை

ராஜபாளையம், மார்ச் 6: ராஜபாளையம் - தென்காசி சாலை தேசிய நெடுஞ்சாலையாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. ஆனால், இச்சாலையில் மாநில அரசு விரிவாக்க பணிகளையும், அடிப்படை பணிகளையும் செய்யாத நிலைய உள்ளது. இச்சாலையை நகராட்சி நிர்வாகமும் கண்டு கொள்வதில்லை. நகரின் மையப் பகுதியில் பல குடியிருப்பு பகுதியில் இருந்து இணைப்பு சாலையாக செயல்படும் தென்காசி சாலை, மதுரை சாலைகளில் அவ்வப்போது பெய்யும் லேசான மழைக்கு ஆங்காங்கே மழைநீர் தேங்கி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. மக்கள் அதிகம் பயன்படுத்தும் இச்சாலையின் இருபுறமும் வாறுகால் வசதி இல்லாதது பெரும் பிரச்னையாக உள்ளது.
மேலும் இச்சாலையில் தேங்கும் கழிவுநீர் மற்றும் மழைநீர் சாலையை சேதப்படுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் நடமாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, தேசிய நெடுஞ்சாலை அறிவிக்கப்பட்ட இச்சாலையை உடனடியாக பணிகளை மேற்கொள்ள வேண்டும் என நகர் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Road ,Rajapalayam ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...