×

நாளை சனி பிரதோஷம் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாள் அனுமதி பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு

வத்திராயிருப்பு, மார்ச் 6: சனி பிரதோஷம் துவங்க உள்ள நிலையில் சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு நாளை (மார்ச் 7) முதல் மார்ச் 10ம் தேதி வரை பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
வத்திராயிருப்பு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி தினங்களில் தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என பக்தா–்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இடைப்பட்ட விடுமுறை நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. நாளை முதல் 10ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 4 நாட்களுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

நாளை பிரதோஷம் என்பதாலும், விடுமுறை நாட்களாக சனி, ஞாயிறு என்பதால் கூட்டம் அதிகமாக வருவதற்கான வாய்ப்பு உள்ளது. நாளை 4.30 மணியிலிருந்து 6 மணிக்குள் பக்தர்கள் சனிபிரதோஷம் என்பதால் சென்னை, திருச்சி, கோவை, வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். மார்ச் 9ம் தேதி மாசி பவுர்ணமி என்பதால் சுந்தரமகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற உள்ளது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளிப்பார். நிகழ்ச்சி 10ம் தேதியுடன் நிறைவடைகிறது. செயல் அலுவலர் விஸ்வநாத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.

Tags : pilgrims ,
× RELATED நாகூர் தர்காவில் 467வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்