×

வருசநாடு அருகே சிங்கராஜபுரம் கிராம பகுதிக்கு பஸ் வசதி செய்து தர கோரிக்கை

வருஷநாடு, மார்ச் 6: வருசநாடு அருகே சிங்கராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பூசனூத்து, சாந்திபுரம், புதுக்கோட்டை, கோரையூத்து, பள்ளத்தூர், சின்ன சாந்திபுரம், காந்திபுரம், வெள்ளிமலை, உட்பட்ட 25க்கும் மேற்பட்ட மலை கிராமத்தில் பஸ் வசதி வேண்டி பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஆட்டோக்கள் இருசக்கர வாகனங்கள் போன்ற வாகனங்களில் அதிக கட்டணம் ரூ.50 முதல் ரூ.100 வரை கொடுத்து பொதுமக்கள் வாகனங்களில் பயணம் செய்கின்றனர். இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், விவசாயிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். இந்நிலையில் விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வதற்கும் தேனி, ஆண்டிபட்டி, கம்பம், சின்னமனூர் போன்ற பகுதிகளுக்கு விவசாய விளை பொருட்களை கொண்டு செல்வதிலும் சிக்கல் நிலவி வருவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து கிராமவசி கூறுகையில், ‘ஏற்கனவே கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கடமலைக்குண்டு மயிலாடும்பாறை அரண்மனை புதூர் கடமலைக்குண்டு வழியாக பஸ் வசதி இருந்தது. திடீரென தற்போது அதை நிறுத்திவிட்டனர். எதற்காக நிறுத்தப்பட்டது என்று தெரியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். இதுகுறித்து கிராமவசி ராமசாமி கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும் அதிக கட்டணங்கள் கொடுத்து பயணம் செய்வது மிகவும் சிரமமாக உள்ளது. தார்ச்சாலை வசதி இருந்தும் பஸ் வசதி இல்லாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. மீண்டும் மலை கிராமத்திற்கு பஸ் வசதி ஏற்படுத்திக் கொடுக்க தேனி மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்

Tags : village ,Singarajapuram ,Varusanad ,
× RELATED கிணற்றில் மூழ்கி வாலிபர் பலி