×

விளையாட்டு விழா

தேனி, மார்ச் 6: தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா நடந்தது. தேனி அருகே வடபுதுப்பட்டியில் உள்ள தேனி நாடார் சரசுவதி பொறியியல் கல்லூரியில் பத்தாம் ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. விழாவிற்கு தேனி மேலப்பேட்டை இந்து நாடார் உறவின்முறைத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராஜமோகன், பொருளாளர் பழனியப்பன் முன்னிலை வகித்தனர். கல்லூரி செயலாளர் காசிபிரபு வரவேற்றார். கல்லூரி இணை செயலாளர்கள் ராஜ்குமார், கல்லூரி முதல்வர் மதளைசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். விழாவில் கூடைப்பந்து தேசிய விளையாட்டு வீராங்கனை ஆதிராமனோஜ் கலந்து கொண்டு விளையாட்டில் முறையான பயிற்சி, ஆர்வம் மற்றும் கட்டுப்பாடு இருந்தால் ஏழை மாணவர்களும், விளையாட்டுத் துறையில சாதிக்கலாம் என பேசினார். விழாவில் விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் சோலைராஜ், மாதவன்,வேலைவாய்ப்பு அலுவலர் அர்ச்சனா, உடற்கல்வி இயக்குநர் மாலினி ஆகியோர் செய்தனர்.

Tags : The Festival ,
× RELATED மண்டைக்காடு மாசி கொடை விழாவுக்கு முன்...