×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து பொதுக்கூட்டம்

புதுச்சேரி, மார்ச் 6: இந்திய அரசியல் சட்ட பாதுகாப்பிற்கான பொதுமக்கள் கூடுகை என்ற தலைப்பில் மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் சாரம் அவ்வை திடலில் பொதுக்கூட்டம் நடந்தது. இயக்கத்தின் பொதுசெயலாளர் முருகானந்தம் தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் ஜகான் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் லெனின் துவக்கவுரை ஆற்றினார். துணை செயலாளர் இளஞ்செழியன் நோக்கவுரை ஆற்றினார். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மனித உரிமைக்கான குடிமக்கள் இயக்கம் ஆசீர் ரஞ்சிதம், புதுச்சேரி கத்தோலிக்க கல்வி நிறுவனங்களின் கழக செயலர் சுவாமிநாதன், புதுச்சேரி ஜமாஅத் உலமா சபை தலைவர் கலீலுர் ரகுமான் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினர்.

இயக்க நிர்வாகிகள் காளிதாஸ், ஆறுமுகம், மதுரை நாயகம், முனுசாமி, அறவாழி, தயாளன், கோபாலகிருஷ்ணன், ேவல்முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசியவர்கள், மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய குடிமக்கள் பதிவேடு, மக்கள் தொகை பதிவேடு திட்டங்களை அமல்படுத்தக்கூடாது என வலியுறுத்தினர். கோபிநாதன் தொகுத்து வழங்கினார். சண்முகம் நன்றி கூறினார்.

Tags : General Assembly ,
× RELATED குடியுரிமை திருத்த சட்டத்திற்கு...