×

தமிழ் செம்மல் விருதுக்கு 18க்குள் விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, மார்ச் 6: தமிழ்செம்மல் விருதுக்கு மார்ச் 18ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராஜன் விடுத்துள்ள அறிக்கை: சிவகங்கை தமிழ் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் ஆர்வலர்களைக் கண்டறிந்து அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தும் வகையில் தமிழக அரசு 2015ம் ஆண்டு முதல் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒரு தமிழ் ஆர்வலரைத் தேர்வு செய்து அவர்களுக்கு “தமிழ்ச் செம்மல்” விருது வழங்கி சிறப்பித்து வருகிறது.

 “தமிழ்ச் செம்மல்” விருதாளர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டு வருகிறது. 2020ம் ஆண்டிற்கான “தமிழ்ச் செம்மல்” விருதுக்கான விண்ணப்பங்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.  விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன் விவரக் குறிப்பு, இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோக்களுடன், ஆற்றிய தமிழ்ப்பணிக்கானச் சான்றுகளையும் இணைத்து சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் 18.3.2020க்குள் நேரிலோ அல்லது அஞ்சலிலோ அனுப்பி வைத்தல் வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தை தொர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED 1,700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற...