×

திண்டிவனம் பகுதிகளில் பயிரிடப்பட்ட தர்பூசணி அறுவடை தீவிரம்

திண்டிவனம், மார்ச் 5: திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்ட தர்பூசணி தற்போது அறுவடை செய்யப்பட்டு வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்தாண்டில் ஏற்பட்ட விலை வீழ்ச்சியின் காரணமாக விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மற்றும் மரக்காணம் சுற்றுவட்டார பகுதிகளான பிரம்மதேசம், முருக்கேரி, உலகாபுரம், கந்தாடு, புதுப்பாக்கம், நடுக்குப்பம், ஒலக்கூர், ஊரல், பட்டணம், விநாயகபுரம் ஆகிய கிராம விவசாயிகள் பல ஏக்கரில் ஒவ்வொரு ஆண்டும் தர்பூசணி சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகள் பயிர் செய்து வந்த  தர்பூசணி காய்கள் அறுவடைக்கு தயாராகி உள்ளது. அவ்வாறு அறுவடை செய்யப்பட்ட தர்பூசணி பல்வேறு மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் வந்து மாதக் கணக்கில் தங்கியிருந்து காய்களை வாங்கி செல்கின்றனர்.

தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது. ஆண்டு தோறும் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைத்து வந்ததால் மணிலா, நெல், கரும்பு பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகள் பலர் இந்த ஆண்டு அதிக அளவில் தர்பூசணி சாகுபடி செய்வதில் ஆர்வம் காட்டினர்.  ஆனால் இந்த ஆண்டு விலை வீழ்ச்சி காரணமாக தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். கோடை காலங்களில்  வெப்பத்தை தணிக்க தர்பூசணி நகரப் பகுதிகள், கிராமப்புறங்கள், சாலை ஓரங்கள், பள்ளி கல்லூரி வளாகங்கள், ஆகிய இடங்களில் விற்பனைக்கு  குவிக்கப்பட்டுள்ளன. மேலும் ஏப்ரல்,மே மாதங்களில் கூடுதலாக விலை போகவில்லை என்றால்  தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகும் எனவும், விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : areas ,Tindivanam ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் மிளகாய் உலர் களம் அமைக்க கோரிக்கை