×

சிவகங்கையில் திமுக பொதுக்கூட்டம்

சிவகங்கை, மார்ச் 6:  சிவகங்கை சண்முகராஜா கலையரங்கில் நகர் திமுக சார்பில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் 67வது பிறந்த நாளை முன்னிட்டு இளைஞர் எழுச்சி நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர் செயலாளர் துரைஆனந்த் தலைமை வகித்தார். மாவட்ட துணைச்செயலாளர் மணிமுத்து, முன்னாள் நகர் மன்றத்தலைவர் சாத்தையா, ஒன்றிய செயலாளர்கள் முத்துராமலிங்கம், ஜெயராமன், வழக்கறிஞரணி அமைப்பாளர் ஆதிஅழகர்சாமி முன்னிலை வகித்தனர். திமுக மாவட்ட செயலாளர் பெரியகருப்பன் எம்எல்ஏ, மாநில இலக்கிய அணி தலைவர் தென்னவன், நாஞ்சில் சம்பத், தலைமைக்கழக பேச்சாளர் அலெக்சாண்டர் சிறப்புரையாற்றினர்.

மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் துஷாந்த்பிரதீப்குமார், சேதுபதிராஜா, மகளிரணி துணை அமைப்பாளர் மார்கரெட்கமலா, மாணவரணி துணை அமைப்பாளர் ராஜ்குமார், காளையார்கோவில் ஒன்றிய பொறுப்பாளர் கென்னடி, முன்னாள் நகர்மன்ற தலைவர் நாகராஜன், நிர்வாகிகள் வீனஸ்ராமநாதன், ரமேஷ், ஜெயகாந்தன், சூரியநாராயணன், சரவணன் மற்றும் நகர, ஒன்றிய நிர்வாகிகள் கட்சியனர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு சேலை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 

Tags : DMK ,meeting ,Sivaganga ,
× RELATED மாவட்ட வாரியாக அதிமுக அரசின் ஊழல்...