தேவகோட்டையில் பள்ளி விளையாட்டு விழா

தேவகோட்டை, மார்ச் 6:  தேவகோட்டை ஸ்ரீமுருகானந்த நடுநிலைப்பள்ளியில் நிறுவனர் தின விளையாட்டு விழா நடைபெற்றது. பள்ளி நிறுவுநர் முத்துச்சாமி படத்தை, புலவர் சுந்தரம் திறந்து வைத்தார். சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி செயலர் சாந்தி ஆச்சி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தார். மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். வழக்கறிஞர் சண்முகவேல் ஒலிம்பிக் கொடி, தீபத்தை ஏற்றி வைத்தார். பள்ளிச் செயலர் முருகன், பள்ளிக்குழு தலைவர் சிந்தாமணி, பள்ளி நிர்வாகி முத்துவேல் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியை மீனாம்பிகை வரவேற்றார். மாணவர்கள் தனித்திறன் போட்டியில் தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தினர். பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டும் சான்றிதழும் வழங்கப்பட்டது. ஆசிரியை அருள் அன்னமலர் நன்றி கூறினார்.

Related Stories:

>