×

முதுகுளத்தூரில் காவு வாங்க காத்திருக்கும் பழைய யூனியன் கட்டிடம்

சாயல்குடி, மார்ச் 6: முதுகுளத்தூர் யூனியன் அலுவலக பழைய கட்டிடம் சேதமடைந்து கிடப்பதால், விபத்து ஏற்படும் முன்பு அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். முதுகுளத்தூர் யூனியன் அலுவலகத்திற்கு ஒன்றியத்திலுள்ள 48 பஞ்சாயத்துகளை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக அலுவலக வேலை நாட்களில் வந்து செல்கின்றனர். வளாகத்திலுள்ள சார்நிலை கருவூலம், குழந்தை நல அலுவலகம், உதவி செயற்பொறியாளர் அலுவலகம் போன்றவற்றிற்கும், யூனியன் அலுவலகத்திற்கும் அலுவலர்கள், ஊழியர்கள் வந்து செல்கின்றனர். தற்போது பஞ்சாயத்து தலைவர்கள், உதவி தலைவர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் வளாகத்திற்குள் ஒருங்கிணைந்த பழைய அலுவலக கட்டிடம் ஒன்று உள்ளது. அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் விபத்தை உணராமல் நிழலுக்காக பழைய கட்டிடம் பகுதிக்கு சென்று அமருக்கின்றனர். அலுவலகத்திற்கு வருவோர் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களையும் அதனருகே நிறுத்துகின்றனர். கட்டிடத்தின் மேற்கூரை உள்ளிட்ட அனைத்து பகுதியும் முற்றிலும் சேதமடைந்து இடியும் நிலையில் இருப்பதால், விபத்து ஏற்பட்டு விபரீதம் ஏற்படும் முன்பு பழைய கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், அலுவலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags : Old Union ,building ,Mudukulathur ,
× RELATED என்னை பச்சோந்தி என்ற எடப்பாடி பச்சை...