×

எய்ம்ஸ் கட்டுமான பணி செப்டம்பரில் தொடங்கும் மத்திய இணை அமைச்சர் தகவல்

மதுரை, மார்ச் 6: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கும் என மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே தெரிவித்தார். இந்திய ரயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் இயக்கப்படும் ராமாயண சிறப்பு சுற்றுலா ரயில், மதுரை ரயில் நிலையத்தை நேற்றிரவு வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து புறப்பட்ட ரயிலை, மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சவ்பே, கொடியசைத்து துவக்கி வைத்தார். நெல்லையில் நேற்று புறப்பட்ட இந்த ரயில், மதுரை, திண்டுக்கல், காட்பாடி, ரேணிகுண்டா, குண்டக்கல், பெல்லாரி, நாசிக், மன்மாட், அலகாபாத், வாரணாசி, அயோத்தி, பைசாபாத் ஆகிய நகரங்கள் வழியாக சென்று மீண்டும் நெல்லையை மார்ச் 18ம் தேதி வந்தடையும்.

நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் லெனின், உணவு மற்றும் சுற்றுலா கழக பொது மேலாளர் ஜெகநாதன், மக்கள் தொடர்பு அதிகாரி வீராசுவாமி உள்பட பலர் கலந்து ெகாண்டனர். முன்னதாக மத்திய இணை அமைச்சர்  அஸ்வினி குமார் சவ்பே நிருபர்களிடம் கூறுகையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் 2020 செப்டம்பரில் தொடங்கும். இப்பணிகள் 2022 செப்டம்பரில் நிறைவு பெறும். மருத்துவமனை சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ளது. இந்தியா முழுவதும் கூடுதலாக 75 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

Tags : Union Minister of State ,AIIMS ,
× RELATED மயிலாடும்பாறை அருகே பாதியில்...