×

வடமாநில வாலிபர் கொலை சிறுவனிடம் விசாரணை

மதுரை, மார்ச் 6: மதுரை ஆரப்பாளையத்தில் வடமாநில வாலிபர் கொல்லப்பட்ட வழக்கில் சிறுவன் சிக்கியுள்ளான். மதுரை ஆரப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் பின்புறத்தில் வைகை ஆற்று கரையோரத்தில் நேற்று முன்தினம் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டார். அவரது பெயர், முகவரி எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து கரிமேடு போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்யப்பட்டவர், வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இந்நிலையில் அந்த வாலிபரிடம் வழிப்பறி செய்யும் நோக்கத்தில், ஆரப்பாளையம் பகுதியை சேர்ந்த 3 பேர் கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிந்து, கொலையாளிகளை தேடி வந்தனர். இதில் நேற்று 17 வயது சிறுவன் மட்டும் சிக்கி உள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரை தேடி தனிப்படை போலீசார், கோவைக்கு விரைந்துள்ளனர்.

Tags : Investigation ,murder ,Northern Territory ,
× RELATED அசோக் நகரில் பரபரப்பு: தாய், மகன் மர்மச்சாவு: கொலையா என விசாரணை