×

உடுமலை பஸ் ஸ்டாண்டில் நடைபாதையை ஆக்கிரமித்த வியாபாரிகள்

உடுமலை,மார்ச்.6: உடுமலை மத்திய பேருந்து நிலையத்திற்குள் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள்  நிற்பதற்கு கூட இடம் இல்லாத வண்ணம், பேருந்து நிலைய வளாகத்திற்குள் கடை வைத்திருக்கும் வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்த காலை, மாலை வேளைகளில் உயர்நிலை கல்வி, மேல்நிலைக்கல்வி, ஐடிஐ, பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி  என கல்வி கற்பதற்காக ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகள் குவிந்து நிற்பர். தற்போது கோடை துவங்கும் முன்பாக வெயில் கொளுத்தி வருவதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் மாணவ,மாணவிகள் பேருந்து நிலையத்தில் உள்ள நிழற்குடைகளின் கீழ் இளைப்பாற முடியாத வண்ணம் பேக்கரி, டீக்கடை, புத்தக கடை, இனிப்புக்கடை, பழக்கடை, பலகாரக்கடை என ஒவ்வொரு கடைக்காரர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டியும் கடைகளை விரிவுபடுத்தி பாதசாரிகள் நடக்க முடியாத அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.

இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் கொளுத்தும் கோடை வெயிலில் மணிக்கணக்கில் காத்து நின்று மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். நகராட்சி அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Merchants ,sidewalk ,bus stand ,Udumalai ,
× RELATED புதுச்சேரி பேருந்து நிலையத்தில் இயங்கிய காய்கறி அங்காடி இடமாற்றம்