×

கோவில் நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தல்

திருப்பூர், மார்ச். 6:  கோவில் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோயில் நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு பட்டா செய்து கொடுக்க அனுமதிக்கக் கூடாது என வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில், 600 ஏக்கர் நிலப்பரப்பு மட்டுமே வழங்கப்படவுள்ளதாக தமிழக அரசு, ஐகோர்ட்டில் வாதிட்டுள்ளது. இது கோவில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி. அரசின் இந்த முயற்சி சட்ட விரோத ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் வகையில் உள்ளது.

ஏழைகளுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமெனில் அரசு புறம்போக்கு நிலங்களை வழங்கலாம். நம் முன்னோர்கள் கோவில் வழிபாட்டிற்கு தானம் கொடுத்த நிலத்தை ஆக்கிரமிப்பாளர்களுக்கு கொடுக்கக்கூடாது. கோவில் நிலத்தை அழித்தால் வரும் காலங்களில் கோவில்களும் அழிந்து போகும். அரசின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இந்த நிலைபாட்டை அரசு கைவிட வேண்டும். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : temple lands ,
× RELATED இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே...