×

பட்டிவீரன்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஏராளமானோர் பங்கேற்பு

பட்டிவீரன்பட்டி, மார்ச் 6: பட்டிவீரன்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பட்டிவீரன்பட்டியில் உள்ளது  மாரியம்மன் கோயில். 200 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. கடந்த பிப்.2ம் தேதி யாகசாலை பூஜை, வேத மற்றும் திருமுறை பாராயணங்களுடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. தொடர்ந்து விநாயகர் வழிபாடு, விக்னேஷ்வர பூஜைகள் நடந்தது. பிப்.3ம் தேதி நவகிரஹ ஹோமம், தனபூஜை, பூர்ணாஹுதி உள்ளிட்ட பூஜைகள் நடந்தன. பிப்.4ம் தேதி மங்கள இசையுடன் 3ம் கால பூஜைகள், மூலமந்ததிர ஹோமங்கள் நடந்தன. நேற்று கும்பாபிஷேகத்தையொட்டி கோ பூஜை, நாடி சந்தனம், பதராதானம், கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து விமானம், மூலஸ்தன கோபுர கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தபப்ட்டது. வேதமணி சிவாச்சாரியார் தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேக பூஜைகளை செய்தனர்.
தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர்மக்கள் இணைந்து செய்திருந்தனர்.

Tags : gathering ,Pathiveeranpatti Mariamman Temple Kumbabhishekam ,
× RELATED மெஞ்ஞானபுரம் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் குடும்ப கூடுகை விழா